பச்சரிசி மாவு உப்புமா
Advertisement
பச்சரிசி மாவு - 200 கிராம்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
அரிசி மாவுடன் உப்பு சேர்த்து, புளித்தண்ணீர் விட்டு கெட்டியாக இல்லாமல், தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, மாவைச் சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் கிளறி இறக்கவும்.
Advertisement