மிதிபாகற்காய் புளியோதரை
தேவையான பொருட்கள்
6 லிருந்து 8மிதிபாகற்காய்
2 கப்வெண் புழுங்கலரிசி
எலுமிச்சை அளவுபுளி
1 டீ ஸ்பூன்ம.தூள்
சிறு கட்டிவெல்லம்
ருசிக்குஉப்பு
2 டீ ஸ்பூன்பெருங்காயத்தூள்
வறுக்க:-
சி.மிளகாய் 10
1ஸ்பூன்வெந்தயம்
1ஸ்பூன்மிளகு
தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
1டீ ஸ்பூன்வெந்தயம்
2சி.மிளகாய்
2ப.மிளகாய்
4 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
2 ஆர்க்குகறிவேப்பிலை
தேவையான அளவுதண்ணீர்
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.பாகற்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.புளியை ஊறவைத்து பின் நன்கு கரைத்து வடிகட்டவும்.வடிகட்டிய புளிக்கரைசலில், ம.தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வெறும் கடாயில் மிளகாயை போட்டு, நன்கு கருக வறுத்து தட்டில் ஆற விடவும்.அதே கடாயில், மிளகு, வெந்தயத்தை சிவக்க வறுத்து தட்டில் ஆற விடவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும், பாகற்காயுடன், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கியதும், தட்டில் எடுக்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு,வெந்தயம், ப.மிளகாய், சி.மிளகாய் தாளித்ததும், புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.கொதித்ததும், வதக்கிய பாகற்காயை போடவும்.பிறகு, வெல்லத்தை சேர்த்து கொதிக்க விட்டதும், வறுத்த பொடியை போடவும்.கொதித்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒன்று சேர கிளறி இறக்கவும்.இறங்கியதும், பௌலுக்கு மாற்றி, மேலே 2 ஸ்பூன், ந.எண்ணெய் விடவும். இப்போது புளிக்காய்ச்சல், தயார்.தட்டில் சாதத்தை ஆறவிட்டு, மேலே, புளிக்காய்ச்சல், சிறிது ந.எண்ணெய் விட்டு நன்கு கிளறி எடுக்கவும்.