மரவள்ளிக்கிழங்கு இனிப்பு அடை
தேவையானவை :
துருவிய மரவள்ளிக் கிழங்கு - 1 கப்,
இட்லி அரிசி - 1/4 கப்,
தூள் வெல்லம் - 3/4 கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து கிழங்கு சேர்த்து நைஸாக அரைத்து மற்றப் பொருட்கள் சேர்த்து கலக்கவும். ேதாசைக்கல்லில் சிறிது நெய் விட்டு ஒரு கரண்டி அளவு மாவை தோசைக்கல்லில் வைத்து கைகளால் தட்டி மேலே சிறிது நெய் விட்டு மறுபக்கமும் வேக வைத்து எடுக்கவும்.