ஸ்வீட் கார்ன் சூப்
மக்காச் சோளக் கதிர் 2
பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் 1
பூண்டு 12 பற்கள்
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் 2 கப்
கெட்டி க்ரீம் ½ கப்.
உப்பு & மிளகுத் தூள் தேவையான அளவு
ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
நெய்யில் வறுத்த ரஸ்க் துண்டுகள் ஒரு கைப்பிடி
செய்முறை:
மக்காச்சோள முத்துக்களை சோளக்கதிரிலிருந்து பிரித்தெடுத்து கொதிநீரில் போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்க்கவும்.அதில் வெங்காயம் பூண்டை நறுக்கி சேர்க்கவும். அவை சிறிது சிவந்ததும் ஒரு மிக்ஸியில் போடவும். அதனுடன் முக்கால் பங்கு சோள மணிகளை சேர்த்து அரைக்கவும்.நன்கு மசிந்தவுடன் அதனுடன் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கலவையை சேர்த்து அதனுடன் காய்கறி ப்ரோத் (broth) ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். அதனுடன் மீதமுள்ள சோள முத்துக்களை சேர்க்கவும். பின் உப்பு மிளகுத்தூள் தேவையான அளவு சேர்க்கவும். அதில் 1 டேபிள் ஸ்பூன் பட்டரை சேர்த்து இறக்கிவிடவும். கொத்த மல்லி இலைகளைச் சேர்த்து அலங்கரிக்கவும். நெய்யில் வறுத்த ரஸ்க் துண்டுகளைச் சேர்த்து சூடாகப் பரிமாறி சுவைத்து மகிழவும்.