தேங்காய் பால் சாதம்
1 கப் அரிசி
2 பெரிய வெங்காயம்
1 தக்காளி
5 பச்சை வெங்காயம்
2 கப் தேங்காய் பால்
2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 டேபிள் ஸ்பூன் தயிர்
தேவையான அளவு உப்பு
சிறிதளவுகொத்தமல்லி இலை
சிறிதளவுபுதினா
தாளிப்பதற்கு
4 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
2 டேபிள் ஸ்பூன் நெய்
3கிராம்பு
3 ஏலக்காய்
1பட்டை
2பிரியாணி இலை
சிறிதளவுகல்பாசி பூ
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கல்பாசி சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பிறகு பச்சை மிளகாய் இரண்டு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போன பிறகு கொத்தமல்லி இலை புதினா சேர்த்து வதக்கவும்.பிறகு ஒரு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் கப் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலந்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்த்து.நன்றாக கிளறி மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.சுவையான தேங்காய் பால் சாதம் தயார்