சர்க்கரைவள்ளிக்கிழங்கு அப்பம்
தேவையானவை:
சர்க்கரைவள்ளிக்கிழங்கு 100 கிராம் (வேகவைத்து மசித்தது),
வெல்லம் - 5 டேபிள் ஸ்பூன்,
பால் ½ லிட்டர்,
வறுத்து அரைத்த அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - ¼ டீஸ்பூன்,
உப்பு - சிட்டிகை அளவு.
செய்முறை:
பாலை கோவாப் பதத்தில் காய்ச்சவும். பிறகு கோவா, மசித்த வள்ளிக்கிழங்கு, வெல்லம், அரிசிமாவு, தேங்காய் துருவல், பேக்கிங் பவுடர், நெய், சிட்டிகை அளவு உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் 1 சுற்று சுற்றவும் (அ) கையால் அழுத்திப் பிசையவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக செய்து வடை போல் தட்டி, இட்லி தட்டில் நெய் தடவி அதில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். எண்ணெய் இல்லாததால் சுலபமாக ஜீரணமாகும். வயதானவர்களும், குழந்தைகளும் தாராளமாகச் சாப்பிடலாம். சுவையும் பிரமாதமாக இருக்கும்.