அகத்திக்கீரை குழம்பு
தேவையானவை: அகத்திக்கீரை - 1 கப், சின்ன வெங்காயம் - ½ கப், பூண்டு - 4 பல், தக்காளி - 3, புளி-சிறிய எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி - 2 ஸ்பூன், உப்பு - திட்டமாக, எண்ணெய் - 50 மிலி. தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா ½ ஸ்பூன், உளுத்தம்...
தேவையானவை:
அகத்திக்கீரை - 1 கப்,
சின்ன வெங்காயம் - ½ கப்,
பூண்டு - 4 பல்,
தக்காளி - 3,
புளி-சிறிய எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்,
உப்பு - திட்டமாக,
எண்ணெய் - 50 மிலி.
தாளிக்க:
கடுகு, வெந்தயம் - தலா ½ ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து, பூண்டு நசுக்கி, வெங்காயம், தக்காளி நறுக்கி சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து விட்டு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். குக்கரில் அகத்திக் கீரையை 2 விசில் விட்டு வேகவைத்து நீரை வடிகட்டி குழம்பில் பிழிந்து போடவும். பச்சை வாசனை போன பின்பு வெறும் கடாயில் துவரம் பருப்பு, வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி, வெந்தயம் தலா ½ ஸ்பூன் வறுத்துப் பொடித்து, சில நிமிடம் கொதிக்க விட்டு குழம்பை இறக்கவும்.