கீரை சன்னா கீ ரைஸ்
தேவையான பொருட்கள்
1கப் உதிரியாக வேகவைத்த பாசுமதி சாதம்
1/4கப் வேக வைத்த வெள்ளை சன்னா
2கப் பொடியாக நறுக்கின அரைக்கீரை
1நீட்டமாக நறுக்கின வெங்காயம்
2நறுக்கின தக்காளி
1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
தேவயனவைமசாலா பொடி செய்ய
2டேபிள்ஸ்பூன் நிலக்கடலை
1ஸ்பூன் வரமல்லி
1/2டீஸ்பூன் ஸ்பூன் மிளகு
6வரமிளாகாய்
1ஸ்பூன் சீரகம்
தாளிக்க
1ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்
1/4 கப் நெய்
10 முந்திரி,
கறிவேப்பிலை, பச்சை கொத்தமல்லி
தேவையானஅளவு உப்பு, மஞ்சள்தூள்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை20 நிமிடம் தண்ணியில் ஊறவைத்து 2ஸ்பூன் நெய் சேர்த்து உதிரியாக வேக வைத்துஎடுத்து வைத்து க்கவும்.வெறும் வாணலி ஸ்டஸ்வ்வில் வைத்து, நிலக்கடலை, மற்றும் சாமான்களை வறுக்க வேண்டியதை வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கவும்.ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேப்பிலை தாளித்துக்கவும்.அத்துடன் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அத்துடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கீரை சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, கீரை நன்கு வெந்ததும் சன்னா சேர்த்து கலந்து நன்கு கிளறவும்.அதில் பொடி செய்து வைத்திருக்கும் மசாலா சேர்த்து நன்கு கலந்து, பாசுமதி ரைசுடன் நன்கு கலந்துக்கவும்.கரண்டியை ஸ்டவ்வில் வைத்து 1ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி யை வறுத்து சாதத்தில் கொட்டி, மேலே மல்லி இலை தூவினால், சுவையான கீரை, சன்னா கீ ரைஸ் சாப்பிட தயார்... வெங்காய தக்காளி ரைத்தா வுடன் பரிமாறவும்...மிக சுவையுடனான இந்த ரைசை கீரை சாப்பிடாத குழைந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.