சோயா பருப்பு பொங்கல்
தேவையானவை:
சோயாபீன்ஸ் - 1 கப்,
பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்துக் கொள்ளவும்்), பால் - ½ லிட்டர்,
பொடித்த வெல்லம் - 1¼ கப்,
நெய்யில் வறுத்த முந்திரி - 8 (பொடி செய்யவும்),
ஏலக்காய் தூள் - ¼ ஸ்பூன்,
பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
சோயாபீன்ஸ் பருப்பை வெந்நீரில் 2 நிமிடம் போட்டு, நீரை வடித்துக் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி பிழிந்து வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதில் பாசிப்பருப்பு, சோயா பருப்பை வேகவிடவும். இரண்டும் குழைந்து வெந்தபின், வெல்ல கரைசலை சேர்க்கவும். பிறகு நெய், பொடித்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். சோயா பருப்பு (அ) சோயா கிரானுல்ஸ் பொங்கல் ரெடி.