தக்காளி சூப்
தேவையானவை:
தக்காளி பவுடர், சோள மாவு - தலா ¼ கப்,
ஓட்ஸ் - 8 டேபிள் ஸ்பூன்,
மிளகுத் தூள், சர்க்கரை - தலா 1 டேபிள் ஸ்பூன்,
பச்சைமிளகாய் பவுடர் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பவுடராக் கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடருடன், மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஏர்டைட் கன்டெய்னரில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் தக்காளி சூப் ப்ரிமிக்ஸ் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, அடுப்பில் வைத்து கொதிவிட்டு இறக்கினால் தக்காளி சூப் தயார். மேலே கார்ன்ப்ளக்ஸ்(பொரித்தது) தூவி சுவைக்கவும்.
தக்காளி பவுடர் செய்முறை: 2 கிலோ தக்காளியை மெல்லிய வில்லைகளாக நறுக்கி, மூன்று நாட்கள் வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். கைகளால் எடுத்துப் பார்த்தால், நொறுங்கும் தன்மை வந்ததும், மிக்ஸியில் பவுடராக்கவும். அதனையும் காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி, ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம் பச்சை மிளகாய் பவுடர் செய்முறை: 1/2 கிலோ பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, ஒரு நாள் முழுவதும் வெயிலில் வைத்து, கைகளால் எடுத்தால் நொறுங்கும் பதம் வந்தவுடன் மிக்ஸியில் பவுடராக்கி, பத்திரப்படுத்தவும். இந்த இரண்டு பவுடர்களையும் மேற்கூறிய முறையில் தயாரித்து வைத்துக் கொண்டால் ப்ரிமிக்ஸ் உணவுகளுடன் கலக்கவும், அவசரத் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.