சோளம் வரகு காரசேவு
05:16 PM Jul 09, 2024 IST
தேவையான பொருட்கள்
சோளமாவு / வரகு மாவு - 50 கிராம்
கடலை மாவு - 50 கிராம்
சீரகம், மிளகு - தலா 2 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து அதில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். காரசேவு அச்சில் இட்டு எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். சத்தான காரசேவு ரெடி.