இறால் கிரேவி
தேவையான பொருட்கள்
அரை கிலோ இறால்
இரண்டு பெரிய வெங்காயம்
இரண்டு தக்காளி
ஒரு கொத்து கறிவேப்பிலை
இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
ஒரு ஸ்பூன் காஷ்மீர் சில்லி பவுடர்
பொடி செய்ய தேவையான பொருள்
ஒரு ஸ்பூன் சீரகம்
அரை ஸ்பூன் சோம்பு
ஒரு ஸ்பூன் மிளகு
தேவையானஅளவு மல்லி இலை
செய்முறை:
முதலில் இறாலை சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.தேவையான பொருள்களை பக்கத்தில் தயார் நிலையில் வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் இறாலுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்தது கலந்து வைத்த இறாலை போட்டு நன்றாக பொரித்தெடுக்கவும்.மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்த பருப்பு பொறிந்த உடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.வெங்காயம் வதங்கிய பின்பு கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிய பின்பு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.வதங்கிய பின்பு அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் காஷ்மீர் சில்லி தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதன்பின்பு பொறித்து வைத்த இறாலை சேர்த்து கொஞ்சம் உப்பு அதனுடன் பொடித்து வைத்த மசாலா தூளை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்க்கும்போது இறாலை சுற்றி எண்ணெய் பிரியும். அதனுடன் சிறிதளவு மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.இப்போது சுவையான இறால் கிரேவி தயார்.சப்பத்திவுடன் பரிமாறவும்.