ரவை குஸ்கா
மெல்லிய ரவை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்
தண்ணீர் - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - சிறிது
நெய் - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலி யில் நெய் விட்டு ரவையை வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். அதே வாணலி யில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின்னர் தாளித்த வற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். வதக்கிய வற்றுடன் தேங்காய்ப் பால், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த தேங்காய்ப் பால் கலவை கொதித்த பின்னர் ரவையை சேர்த்து கை விடாமல் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து கிளறி வெந்த பின் கொத்த மல்லித் தழை தூவி இறக்கவும். இப்போது ரவை குஸ்கா தயார்.