சீப்பு சீடை
தேவையானவை:
Advertisement
அரிசி மாவு,
வறுத்து அரைத்த உளுந்து பொடி,
பாசி பருப்பு பொடி,
தேங்காய் பால்,
உப்பு, எண்ணெய்.
செய்முறை:
உளுந்தையும், பாசி பருப்பையும் வறுத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து பொடி, பாசி பருப்பு பொடியுடன் உப்பு, தேங்காய் பால், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் தண்ணீர் தெளித்து மாவை மிருதுவாக பிசையவும். பின்னர், சீப்பு சீடை வடிவ தட்டுடைய முறுக்கு குழலில் வைத்து பிழியவும். பின்பு பிழிந்த மாவை மோதிர வடிவ அளவிற்கு பாதி பாதியாக வெட்டவும். பின்னர், விரலில் வைத்து மோதிரம் போல் சுருட்டி இரு புறங்களும் இணையுமாறு மடக்கிக்கொள்ளவும். பின்னர், எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Advertisement