சின்னமுள்ளன்மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
சின்ன முள்ளன் மீன் -அரைகிலோ
புளி-எலுமிச்சைபழஅளவு
உப்பு -தேவைக்கு
தனி மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 6
தேங்காய்துருவல்- அரைகப்
சீரகம்- அரைஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 6 ஸ்பூன்
கடுகு -கால்ஸ்பூன்
கருவேப்பிலை- 1 கொத்து
செய்முறை:
முதலில் முள்ளன் மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.புளியை வெந்நீரில் ஊறப்போடவும். புளியைக் கரைத்துதண்ணீரை வடிகட்டிஎடுத்துக் கொள்ளவும்.அதை மீன் சட்டியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.அதில் 2ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.தேங்காய், வெங்காயம்,சிறிது சீரகம்சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். அதையும் சேர்த்துக்கொள்ளவும். 2 பச்சை மிளகாய் சேர்க்கவும்..குழம்பு நன்கு கொதிக்கவிடவும். பிறகு சுத்தம் பண்ணிய முள்ளன் மீன்களை குழம்பில் சேர்க்கவும். விரைவில் குழம்பில் மீன்வெந்து விடும்.பின்வேறு பாத்திரத்தில் 6 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்பில் ஊற்றவும். ஒரு கொதி கொதித்து எண்ணெய் மேலே பளபள வென்று வரும் போது கேஸை ஆப் பண்ணவும். சின்ன முள்ளன் மீன் குழம்பு ரெடி.