உப்பு நாரத்தங்காய் ஊறுகாய்
02:58 PM May 07, 2025 IST
தேவையானவை:
நாரத்தங்காய் - 2,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நாரத்தங்காயை நறுக்கி வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். பிறகு, நாரத்தங்காயை எடுத்து வெயிலில் காயவைக்கவும். மாலையில் இதை எடுத்து பெரிய பாத்திரத்தில் போடவும், காலையில் நாரத்தங்காயை திரும்ப வெயிலில் காயவிடவும். இப்படியே ஒரு வாரம் வரை காயவிட்டால்... உப்பு நாரத்தங்காய் ஊறுகாய் ரெடி.