சிவப்பு அவல் தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
1 1 /2 கப் சிவப்பு அவல்
தேவையானஅளவு உப்பு
1டீஸ்பூன் மஞ்சள் தூள்
150கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
5 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது
1டேபிள் ஸ்பூன் இஞ்சி பொடியாக கட் செய்தது
2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
1/2 கப் தேங்காய் துருவல்
சிறிதளவுகறிவேப்பிலை
1டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
செய்முறை
அவலை நன்கு கழுவி உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் இதில் சிறிது உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் அவலை சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.