சிவப்பு அவல் சாட்
தேவையானவை:
Advertisement
ஊறவிட்ட சிவப்பு அவல் - ½ கப்,
வேகவிட்ட முழு வேர்க்கடலை - ½ கப்,
மாதுளை முத்துக்கள் - ¼ கப்,
ஸ்வீட் கார்ன் - உதிர்த்தது - ¼ கப்,
காலா நமக் - ½ டீஸ்பூன்,
சீரகம், தனியா,
கரம் மசாலாப் பவுடர்,
உப்பு - தலா ½ டீஸ்பூன்,
நறுக்கிய மல்லி, சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
சிவப்பு அவலை நன்கு கழுவி, சிறிது உப்பு சேர்த்து நீரில் ½ மணி நேரம் ஊறவிட்டு வடிக்கவும். இத்துடன் வேகவிட்ட முழு வேர்க்கடலை, கார்ன், மாதுளை முத்துக்கள் சேர்த்து நன்கு கலந்து பிற மசாலாக்களை சேர்த்து நன்கு கலந்து ப்ளாக் டீயுடன் பரிமாறவும்.
Advertisement