ரவா பால் கொழுக்கட்டை
தேவையானவை:
கடலை மாவு - ½ கப்,
ரவை - 300 கிராம்,
பால் - ஒரு லிட்டர்,
சர்க்கரை - ½ கிலோ,
முந்திரி - 50 கிராம்,
ஏலக்காய் - 5,
நெய் - 100 கிராம்,
உப்பு - ½ டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய்விட்டு கடலை மாவை பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொண்டு கொஞ்சம் பால் விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். ரவையுடன் ஒரு கால் ஸ்பூன் உப்பு, ஒரு கரண்டி சர்க்கரையும் சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து ஊறவைக்கவும்.ஒரு லிட்டர் பாலில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ெகாதிக்க ஆரம்பித்தவுடன், கரைத்து வைத்துள்ள கடலை மாவுக் கரைசலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி விடவும். கொதிக்கும் போது நெருப்பைக் குறைத்துக் கொண்டு பிசைந்து வைத்துள்ள ரவையை முறுக்குக் குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு ஒவ்ெவாரு ஈடாக கொதிக்கும் பாலில் பிழிந்து விடவும்.எல்லா முறுக்கு துண்டுகளும் வெந்து மேலே மிதந்து வந்த பிறகு ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, சர்க்கரை போட்டு கொதிக்க விடவும். சர்க்கரை நன்கு கரைந்து கொதித்த பின்பு இறக்கி வைத்து ஒரு ¼ ஸ்பூன் உப்பு, மீதமுள்ள நெய்யை சேர்த்து ஆறிய பின்பு பரிமாறவும். இந்த ரவா பால் கொழுக்கட்டை சாப்பிட புது விதமாகவும், சுவையாகவும் இருக்கும்.