ரவா லட்டு
05:11 PM Jul 08, 2025 IST
தேவையான பொருட்கள்
1 கப் ரவை
1/2 கப் சீனி
1/4 கப் தேங்காய் துருவல்
2 மேசைக்கரண்டி நெய்
10 முந்திரிப் பருப்பு
10கிஸ்மிஸ் பழம்
1/4 கப் பால்
செய்முறை
2 மேசைக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் இரண்டையும் வறுத்து அதோடு ஒரு கப் ரவையைச் சேர்த்து வறுக்கவும்.1/2 கப் சீனியை பொடித்து வைத்துக் கொள்ளவும்.ரவை வாசனை வந்ததும் சீனிப்பொடியைச் சேர்த்து இறக்கவும்.நன்கு கிளறிப் பால் தெளித்துக் கிளறவும்.ரவை கலவையை லட்டுகளாகப் பிடிக்கவும்.