முள்ளங்கி துவையல்
எண்ணெய்- தேவையான அளவு.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
மல்லி-1/2 தேக்கரண்டி.
வரமிளகாய்-5
சீரகம்-1 தேக்கரண்டி.
பூண்டு-5.
சின்ன வெங்காயம்-10.
முள்ளங்கி-1/4 கிலோ.
கருவேப்பிலை-சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
உப்பு-1/2 தேக்கரண்டி.
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, மல்லி ½ தேக்கரண்டி, வரமிளகாய் 5 சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பூண்டு 5, சின்ன வெங்காயம் 10, நறுக்கிய முள்ளங்கி ¼ கிலோ சேர்த்து இத்துடன் கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்போது அரைத்த பவுடருடன் மிக்ஸியில் இதையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் ½ தேக்கரண்டி உப்பு சேர்த்து துவையலாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சூப்பரான முள்ளங்கி துவையல் தயார்.