முள்ளங்கிக் கீரை துவட்டல்
தேவையானவை:
முள்ளங்கி மேலுள்ள இலைகள் - 1 கப்,
பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்,
அரிந்த சின்ன வெங்காயம் - ¼ கப்,
மிளகாய் - 2,
உப்பு - திட்டமாக,
தேங்காய் துருவல் - 6 ஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய் - 2 ஸ்பூன்,
கடுகு - 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
பெருங்காய பொடி - ¼ ஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பருப்பை ¾ வேக்காடு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைத் தாளித்து, வெங்காயத்தை வதக்கி, கீரையை ேசர்க்கவும். கீரை வெந்ததும் உப்பு, பருப்பு சேர்த்து, கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.