பூசணி - உலர் திராட்சை ராய்த்தா
Advertisement
தேவையானவை
பூசணித் துருவல் - 2கப்
உலர் திராட்சை - 1 தேக்கரண்டி
உப்பு - விருப்பமெனில்
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை- சிறிதளவு
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
புளிக்காத தயிர் - 1கப்.
செய்முறை:
பூசணித் துருவலில் உள்ள தண்ணீரை, நன்றாக பிழிந்துவிடவும். தயிரில் தண்ணீர் இருந்தால், அதை வடிகட்டிவிட்டு பூசணித் துருவல் மற்றும் கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் தயிருடன் சேர்த்து கலக்கவும். குளிர வைத்து சாப்பிட, சுவை கூடும்.
Advertisement