இறால் ஃப்ரைடு ரைஸ்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
இறால் - 250 கிராம்
பாஸ்மதி அரிசி - 4 கப்
மீன் சாஸ் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெங்காயத் தாள் - 1 ( நறுக்கவும்)
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
முட்டை - 3
கேரட் - 1 ( நறுக்கவும்)
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் ( நறுக்கவும்)
கொத்த மல்லி தழை - 1 கட்டு ( நறுக்கவும்)
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, இறால் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் அடித்து வைத்த முட்டையை ஊற்றி கிளறி விட்டு வேக வைக்கவும். முட்டை பொடி பொடியாக ஆனதும் வேக வைத்த சாதத்தைப் போட்டு மீன் சாஸ், சோயா சாஸ், சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து கிளறி விடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், வெங்காயத் தாள் சேர்த்து வேக வைக்கவும். இறால் ஃப்ரைடு ரைஸ் தயாரானதும் அதன் மேலாக கொத்த மல்லி தழையை தூவி விட்டு பரிமாறவும். இறால் ஃப்ரைடு ரைஸ் ரெடி!