பொடி குழிப்பணியாரம்
இட்லி மாவு - 4 கப்,
நெய் - 5 டீஸ்பூன்,
எண்ணெய் - 5 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
ஸ்பெஷல் மிளகாய்ப் பொடி தயாரிக்க:
காய்ந்த மிளகாய் - 10,
உளுந்து - 1 கப்,
எள் - 5 டீஸ்பூன்,
கறிவேப்பிலை இதழ்கள் - ¼ கப்,
கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
தோல் நீக்கிய வேர்க்கடலை வறுத்தது - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, அதனுடன் வேர்க்கடலை, சேர்த்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். அதே வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து உடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடிக்கவும். இதனுடன் பொடித்த எள் பொடியினை சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் ஸ்பெஷல் மிளகாய் பொடி தயார். இந்தப் பொடியினை இட்லி மாவில் கலந்து குழிப் பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.