வெந்தய ரவை போண்டா
தேவையானவை:
முளைக்கட்டிய வெந்தயம் - 100 கிராம்,
ரவை - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்,
அரிந்த பச்சை மிளகாய் - 5.
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பெருங்காயம் - ½ ஸ்பூன்,
உப்பு - சுவைக்கு,
எண்ணெய் - 300 மிலி.
செய்முறை:
முளைக்கட்டிய வெந்தயத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் (உளுந்து மாவு போல்), அத்துடன் அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, ரவை, உப்பு, பெருங்காயம், இஞ்சி துருவல் சேர்த்து நன்கு கலந்து வாணலியில் எண்ணெய் காய வைத்து, சிறு சிறு போண்டாவாக போட்டு ெபான்னிறமாய் பொரித்தெடுக்கவும். சுவையான வெந்தய போண்டா தயார்.