சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு
2 கப் - புளித்த தயிர்
1 கப் - தண்ணீர்
தேவையானஅளவு உப்பு
100 கிராம் - சேப்பங்கிழங்கு
அரைக்க
1 மேசைக்கரண்டி - துவரம் பருப்பு
1 தேக்கரண்டி - அரிசி
4- பச்சை மிளகாய்
1/2 தேக்கரண்டி - மிளகு
1/4 தேக்கரண்டி - சீரகம்
சிறு துண்டு - இஞ்சி
தாளிக்க
1 மேசைக்கரண்டி - எண்ணெய்
1 தேக்கரண்டி - கடுகு உளுந்தம் பருப்பு
1/4 தேக்கரண்டி - வெந்தயம்
1 ஆர்க்கு - கறிவேப்பிலை
செய்முறை:
அரிசி பருப்பை ஊற வைக்கவும்.சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி வில்லைகளாக நறுக்கவும்.தயிரைக் கடைந்து கொள்ளவும்.ஊறிய அரிசி பருப்புடன், பச்சை மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்.கடைந்த தயிரில் அரைத்த விழுது சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.நறுக்கிய சேப்பங்கிழங்கு வில்லைகளை கலந்து வைத்துள்ள மோரில் சேர்த்து அடுப்பில் வைத்து நுரைத்து வரும் போது இறக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வத்தல், பெருங்காயம் சேர்த்துத் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.