பிள்ளையார்பட்டி மோதகம்
தேவையானவை:
தேங்காய் துருவல்,
பச்சரிசி, வெல்ல தூள் - 1 கப்,
பாசிப்பருப்பு - ½ கப்,
ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்,
நெய் - 3 டீஸ்பூன்,
தண்ணீர் - 3 கப்.
செய்முறை:
முதலில் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி ஈரமின்றி ஒரு காட்டன் துணியில் நிழலில் பரப்பி காய விடவேண்டும். 10 நிமிடம் கழித்து கையில் பிடித்தால் பிடிபடவும், விட்டால் உதிருமாறு பக்குவத்தில் இருக்க வேண்டும். அதை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும். ஆறிய பின் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பின் 3 கப் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். வெந்ததும் வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலப்பொடி சேர்த்து கிளறவும். ஆறிய பின் மோதகம் ஷேப் அல்லது உருண்டை வடிவில் பிடித்து ஆவியில் வேகவிடவும். முன்பே வெந்த மாவு என்பதால் பத்து நிமிடத்தில் வெந்து விடும். மிருதுவாக சுவையான கொழுக்கட்டை ரெடி.