மிளகு சூப் (Pepper Soup)
தேவையான பொருட்கள்:
Advertisement
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பூண்டு 4 பல்
இஞ்சி 1 அங்குலம் அளவு
வெங்காயம் 1 (நறுக்கியது)
தக்காளி 1 (விரும்பினால்)
எண்ணெய் அல்லது நெய் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்
உப்பு தேவையான அளவு
மல்லித்தழை சிறிதளவு (அலங்கரிக்க).
செய்முறை:
முதலில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை கல்லில் அல்லது மிக்ஸியில் அரைத்து மெல்லிய விழுதாகச் செய்யவும். கடாயில் நெய் அல்லது சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் போது அரைத்த விழுதைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கிளறவும். உப்பு சேர்த்து மிதமான தீயில் 10,15 நிமிடங்கள் கொதிக்க விடவும். சூப் சற்று திக்காகும் வரை வேகவிடலாம். இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
Advertisement