வேர்க்கடலை சாலட்
தேவையானவை:
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
கேரட்- 1
மாங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி.
செய்முறை:
பச்சை வேர்க்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட்டைத் துருவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மாங்காய் இவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்து கொள்ளவும். இவற்றுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான வேர்க்கடலை சாலட் தயார்.