பட்டாணி புலாவ்
தேவையானவை
பாஸ்மதி அரிசி - 1 கப்
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 2 துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா 4
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரி - 1 தேக்கரண்டி
கிஸ்மிஸ் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - 1 கப்
தண்ணீர் - அரை கப்
ஊற வைத்த பட்டாணி - 1 கப்.
செய்முறை:
பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கவும். அதில் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர், மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்த பட்டாணி, முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், அரிசி, தண்ணீர், தேங்காய் பால் தேவையான உப்பு சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி 2 விசில்விட்டு இறக்கிவிடவும். சுவையான பட்டாணி புலாவ் தயார்.