பனீர், பட்டாணி போண்டா
தேவையானவை:
பனீர் துண்டுகள் - 1 கப்,
பச்சைப் பட்டாணி - ½ கப்,
வேகவிட்டு மசித்த உருளைக்கிழங்கு - 2, உப்பு,
மஞ்சள் தூள் - தேவையான அளவு,
தனியா, மிளகாய்,
சீரகப்பொடி, கரம் மசாலா, சோம்பு பொடி, ஆம்சூர் - தலா ½ டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,
பொரிக்க எண்ணெய் - 200 கிராம்.
வதக்க:
வெங்காயம் -1,
இஞ்சி - 1 துண்டு,
தக்காளி - 1,
கேரட், பீட்ரூட் - 1 (பொடியாக நறுக்கவும்),
பச்சைமிளகாய் - 2.
மேல் மாவிற்கு:
கடலைமாவு - 1 கப்,
அரிசிமாவு - 2 டீஸ்பூன், ஓமம், மிளகுப்ெபாடி,
மிளகாய் பொடி - தலா ¼ டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் காயவிட்டு சீரகம், பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். இத்துடன் உருளைக்கிழங்கு, பனீர், பச்சைப் பட்டாணி மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து நன்கு பிசிறி, மல்லித்தழை சேர்க்கவும். சிறியதாக உருட்டிக் கொள்ளவும். மேல் மாவிற்கான பொருட்களை சிறிது நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்து ஓமம், மிளகுப்பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து பிசைந்து, வாணலியில் எண்ணெய் சூடாக்கி பனீர் மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்து, இஞ்சி டீயுடன் பரிமாறவும்.