உலை அப்பம்
தேவையானவை:
பச்சரிசி - ½ கிலோ,
பாசிப் பருப்பு - ¼ கிலோ,
சர்க்கரை - ¼ கிலோ,
தேங்காய் துருவல் - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து, ஊறிய பின் தண்ணீரை வடித்து மாவாக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். அரிசி மாவில் ருசிக்கேற்ப உப்பைச் சேர்த்து, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து இரவில் வைக்க வேண்டும். காலையில் இம்மாவுடன் பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை போட்டு நன்றாகப் பிசைந்து தண்ணீர் விட்டு இட்லி மாவு கரைப்பது போல் கரைத்து இட்லி பாத்திரத்தில் இட்லிபோல் ஊற்றி அவித்து எடுக்கவும். காலை உணவுக்கு ஏற்றது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சுவையாய் இருக்கும்.