ஆரஞ்சு ஜூஸ் ஐஸ்கிரீம்
தேவையானவை:
Advertisement
கமலா ஆரஞ்சு சாறு - 2 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 1 டின்,
கிரீம் - 2 கப்,
சர்க்கரை - 1 கப்,
ஆரஞ்சு சுளைகள் மற்றும் செர்ரி அலங்கரிக்க.
செய்முறை:
கமலா ஆரஞ்சு சாற்றில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பிறகு கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து, மீண்டும் கலக்கவும். அதனுடன் கிரீம் சேர்த்து, நன்கு கலக்கவும். பிறகு கலவையை மூடி போட்ட பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும். அது பாதி கெட்டியாகும் வரை வைத்திருந்து, வெளியே எடுத்து மீண்டும் ஒரு முறை நன்கு பீட்டர் கொண்டு கலக்கி மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும். முழுவதும் கெட்டியானதும் எடுத்து, ஆரஞ்சு சுளைகள் மற்றும் செர்ரி கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
Advertisement