நுங்கு ஸ்மூத்தி
04:53 PM May 21, 2024 IST
தேவையான பொருட்கள்
நுங்குகள் - 3,4 தோல் நீக்கப்பட்டது
தேங்காய் தண்ணீர் - 1 கப்
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
புதினா இலைகள் - கையளவு
தேன் - 1 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - மூன்று
செய்முறை
நுங்கை தேங்காய் தண்ணீர், புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். இதோடு தேனை கலந்து நன்கு மிக்ஸ் செய்யவும். அனைத்தையும் நன்கு கலந்தபின்பு ஐஸ் கட்டி போட்டு அருந்தலாம். குழந்தைகளுக்கு முடிந்தவரை ஐஸ் கட்டி கலந்து கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.