மீன் கறி
தேவையான பொருட்கள்
1/2 kgமீன்
2பெரிய வெங்காயம்
2தக்காளி மீடியம் சைஸ்
சின்ன எலுமிச்சை அளவுபுளி
2,வர மிளகாய்
பத்து பல்பூண்டு
கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள்
4 ஸ்பூன்தேங்காய்த்துருவல்
4முந்திரி
கறிவேப்பிலை
தாளிக்கநல்லெண்ணெய் கடுகு வெந்தயம்
சிறிதளவுவெல்லம்
தேவையான அளவுஉப்பு
அரை ஸ்பூன்சீரகம்
4மிளகு ,
சிறிய துண்டுபட்டை
செய்முறை
மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய வெங்காயத்துடன் 2 தக்காளி சீரகம் சோம்பு பட்டை சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் தாளித்து வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.பின்பு பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து வைத்த விழுதை சேர்த்துக் கொள்ளவும்.நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லி தூள் கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.பின்பு தேங்காயுடன் முந்திரி சேர்த்து அரைத்து பால் எடுத்து சேர்த்துக் கொள்ளவும். சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.கொதித்த உடன் சுத்தம் செய்துள்ள மீன்களை சேர்த்து மூடி வைத்து குழம்பு கெட்டியாகும் வரை சிம்மில் வைத்து கொள்ளவும். சிறிது வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.மல்லி இலை தூவி இறக்கவும்.மீன் கறி ரெடி.