முள்ளு கத்தரிக்காய் துவையல்
முள்ளு கத்திரிக்காய் 4
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7 அ 8
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
கொத்த மல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
புளி - கொட்டைப் பாக்கு அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்,
உடைத்த உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை சேர்த்து நன்கு வறுத்துக் எடுக்கவும். கத்திரிக்காயை அலம்பி துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அதே போல் வெங்காயம் தக்காளியையும் நறுக்கிக் கொண்டு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி கத்திரிக்காய், தக்காளி இவற்றையும் சேர்த்து வதக்கவும். வதக்கியத்தை சிறிது நேரம் ஆற விட்டு தேவையான அளவு உப்பு, கொட்டை பாக்கு அளவு புளி, கொத்தமல்லி இலைகள் சிறிது சேர்த்து விழுதாக அரைக்காமல் சற்று கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிது கறிவேப்பிலை கிள்ளி சேர்த்து தாளித்து அரைத்த துவையலில் கொட்டி கலக்கவும்.இந்த கத்திரிக்காய் துவையல் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். இட்லி, தோசை, அடை, பொங்கல் என அனைத்திற்கும் சிறந்த சைட் டிஷ் ஆகவும் இருக்கும்.