மோர்புக்கை
புழுங்கல் அரிசி - 3 கப்,
கெட்டித்தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
கேரட் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சித் துருவல் - ½ டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - ½ டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய், சமையல் எண்ணெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இதழ்கள்.
செய்முறை:
புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து நைஸாக கெட்டியாக அரைக்கவும். கெட்டித் தயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அரைத்த அரிசியுடன் மோரினையும் சேர்த்து நன்றாக கரைக்கவும். கனமான வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், கேரட் துருவல் வதக்கி கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து சேர்ந்து வந்ததும் ஒரு தட்டில் லேசாக எண்ணெய் தடவி வெந்த கலவையை அதில் போட்டு பரவலாக தேய்த்து ஆறியதும் துண்டுகள் போடவும்.