புதினா துவையல்
தேவையான பொருட்கள்
புதினா 1 கட்டு
புளி கொட்டை பாக்களவு
உப்பு ருசிக்கு
வறுக்க :- க.பருப்பு 1 1/4 டேபிள் ஸ்பூன்
உ.பருப்பு 1 1/4 டேபிள் ஸ்பூன்
சி.மிளகாய் 6
தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன்
ந.எண்ணெய் 2 ஸ்பூன்
தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
உ.பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
சி.மிளகாய் 2
ந.எண்ணெய் 1 டீ ஸ்பூன்
தண்ணீர் தெளித்து அரைக்க
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். புதினாவை சுத்தம் செய்து நன்கு அலசி, பிழியவும். தேங்காயை துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு சூடானதும், க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் சேர்த்து கருகாமல் நன்கு வறுபட்டதும், புதினா, புளி, தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கினதும், அடுப்பை நிறுத்தி விட்டு, ஆறவிடவும். ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து, ஒரு சுற்று சுற்றினதும், பருப்பை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பௌலுக்கு மாற்றவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1 டீ ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொட்டவும். இப்போது, சுவையான, சுலபமான, புதினா துவையல் தயார்.