புதினா பொடி
தேவையானவை:
Advertisement
புதினா - 2 கட்டு (சுத்தம் செய்து நிழலில் காய வைத்தது),
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு - தலா 1 கப்,
மிளகாய் வற்றல்,
உப்பு-தேவைக்கேற்ப,
ஓமம் - 1 ஸ்பூன்,
பெருங்காயம் - 1 துண்டு,
சுக்கு - சிறு துண்டு,
எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை:
மேலே சொன்ன பொருட்களைவாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து புதினாத் தழை, ஓமம், சுக்கு, உப்பு சேர்த்து (இட்லி பொடிப்போல) பொடி செய்யவும். வாசனை விரும்புபவர்கள் இதனுடன் 10, 12 பூண்டு பல்லை எண்ணெயில் வறுத்துப் பொடியுடன் அரைக்கலாம். சாதத்தில் நெய் விட்டுப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால் சுவையோ சுவை!
Advertisement