புதினா - லெமன் மசாலா ஜூஸ்
தேவையானவை:
Advertisement
சுத்தம் செய்யப்பட்ட புதினா இலை - 2 கட்டு,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
ஓமம் - 1 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் - 2,
தேன் - ருசிக்கேற்ப,
உப்பு - ஒரு சிட்டிகை,
சர்க்கரை - தேவைக்கேற்ப.
செய்முறை:
புதினா இலை, ஓமம், இஞ்சி மூன்றையும் மைப் போல மிக்ஸியில் அரைக்கவும். நன்றாக மைப்போல அரைப்பட்டால் வடிகட்ட வேண்டாம். அதனுடன் 2 டம்ளர் தண்ணீர், தேவைக்கேற்ப சர்க்கரை, தேன், உப்பு, எலுமிச்சை பழச்சாறு கலந்து பருகினால் மிகவும் நன்றாக இருக்கும்.
Advertisement