மினி பட்டர் கை முறுக்கு
தேவையான பொருட்கள்
2- 1/2 கப் இட்லி அரிசி
1/2 கப் உளுத்தம் மாவு
2-1/2 டேபிள்ஸ்பூன் வெண்ணை
தேவைக்குஉப்பு
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை
இட்லி அரிசியை 2 மணி நேரம் தண்ணி விட்டு ஊற விட்டு கிரைண்டரில் கொஞ்சமாக் தண்ணி விட்டு நைசாக அரைத்து எடுத்துக்கவும்.ஒரு பவுலில் அரைத்த மாவுடன் உளுத்தம் மாவு மற்றும் உப்பு வெண்ணை, பெருங்காயம் சேர்த்து நன்றாக ஒன்னு சேர பிசைந்து வைத்துக்கவும். கொஞ்சம் மாவு எடுத்து சின்ன சின்ன முறுக்காக கைய்யால் சுத்திக்கவும். ஸ்டவ்வில் வடை சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீடியம் சூட்டில் வைத்து சுத்தி வைத்திருக்கும் முறுக்கை எண்ணையில் போடவும்.3 நிமிடம் கழித்து திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.. எல்லா வற்றையும் இதேபோல் நீதானமாக வறுத்து எடுக்கவும்.மினி முறுக்கு பார்க்கவே மிக அழகாககவும், மிக சுவையாகவும் இருக்கும்... ஏர் டைட் டப்பாவில் பொட்டு வைத்து 2-3 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.