மில்லட்ஸ் கிச்சடி
தேவையான பொருட்கள்
சாமை - அரை கப்
வரகரிசி - அரை கப்
ஜவ்வரிசி - கால் கப்
கொண்டைக்கடலை - கால் கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4 சிறியது.
தாளிதம் செய்ய
பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறிது.
செய்முறை:
வரகரிசி, சாமை, ஜவ்வரிசி மூன்றையும் ரவையாக மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து தனியாக வேக வைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதங்கியதும், அரிசி ரவைக் கலவையை கலந்து, அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு கலந்து மூடி 2 விசில் விட்டு எடுக்கவும். கிச்சடியுடன் வடாம் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.