தினை பெசரட்டு
தேவையானவை:
தினை - 1 கப்
துவரம் பருப்பு - கால் கப்
பயத்தம் பருப்பு - கால் கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை:
தினை, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் தோசைகளாக சுட்டு எண்ணெய் சேர்த்து இருபுறமும் சுட்டெடுக்கவும். சுவையான தினை பெசரட்டு தயார்.