மேத்தி மத்திரி
தேவையானவை:
மைதா மாவு அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
ரவை 1 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
நெய் 5 மேஜைகரண்டி
ஓமம் - கால் தேக்கரண்டி
வெந்தய இலைகள் 1 கைப்பிடி அளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
மைதா மாவு, கோதுமை மாவு, ரவை, மிளகுத்தூள், உப்பு, நெய், ஓமம், வெந்தய இலைகள் ஆகியவற்றை பாத்திரத்தில் கொட்டி கைகளால் விறவி ரொட்டித் தூள் மாதிரி ஆக்கவும். வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து ஊற்றி மிருதுவான மாவாக பிசைந்து கொள்ளவும். பின்னர் 15 நிமிடம் வரை ஊறவைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து விட்டு இதை முள்கரண்டி கொண்டு குத்திக் கொள்ளவும். பின்பு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்பொழுது மொறு மொறுப்பான மேத்தி மத்திரி தயார்.