மீல் மேக்கர் கிரேவி
தேவையான பொருட்கள்
1கப் மீல் மேக்கர்
அரைக்க:
1பெரிய வெங்காயம்
2தக்காளி
1டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்,காரதிற்கேற்ப
2ஸ்பூன் மல்லிதூள்
15புதினா இலைகள்
1டேபிள்ஸ்பூன் அளவு மல்லி இலை
1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்
1துண்டு இஞ்சி
8சிறிய பூண்டு பற்கள்
2துண்டு பட்டை
1ஏலக்காய்
3கிராம்பு
தாளிக்க:
3ஸ்பூன் எண்ணெய்
1/2ஸ்பூன் சீரகம்
கடைசியாக சேர்க்க:
1ஸ்பூன் கஸ்தூரி மெதி
சிறிதளவுமல்லிதழை
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில்,தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் மீல் மேக்கர் சேர்த்து மூடி போட்டு 15நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.மிக்சி ஜாரில் அரைக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை சேர்த்து மைய அரைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து சூடானதும்,எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து,அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின் ஊறிய மீல் மேக்கர்-ல் நன்கு தண்ணீர் பிழிந்து சேர்க்கவும்.கொதித்ததும்,மூடி போட்டு மீல் மேக்கர் வேக வைக்கவும். இதனுடன் கஸ்தூரி மேதி,மல்லி தழை சேர்த்து கலந்து விட்டு மீண்டும் மூடி வைக்கவும். இவையிரண்டும் தான் கிரேவிக்கு சுவை கூட்டும்.நன்கு கொதித்து, தேவையான கிரேவி பதம் வந்ததும்,மல்லித்தழை தூவி பரிமாறலாம்.அவ்வளவுதான். சிம்பிளான, மீல் மேக்கர் கிரேவி ரெடி.