மணத்தக்காளி சூப்
04:44 PM Jun 11, 2025 IST
தேவையானவை:
மணத்தக்காளி கீரை - 1 கப்,
அரிசி களைந்த கழுநீர் - 2 கப்,
அரிந்த சின்ன வெங்காயம் - கைப்பிடிஅளவு,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
மிளகு, சீரகப்பொடி - ½ டீஸ்பூன்,
உப்பு - திட்டமாக.
செய்முறை:
அரிசி கழுநீரில் சின்ன வெங்காயம், அரிந்த கீரை, மஞ்சள் தூள், உப்பு, மிளகு, சீரகத் தூள் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். இதுக்கு தாளிப்பு தேவையில்லை. வாய்ப்புண், வயித்துப் புண்ணுக்கு நல்லது. நீர் பிரியும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.