மதுரை நீர் சட்னி
பச்சை மிளகாய் – 6
பெரிய வெங்காயம் – 3
பொட்டுக்கடலை – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பின் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய் 6 அல்லது உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் வதக்கிய பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1/4 கப் அளவிற்கு பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். ரொம்ப நைசாக அரைக்க வேண்டாம். பின் அதில் போதுமான அளவு அதாவது 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பின் அதில் கடுகு, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து சிறிதளவு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிய பின் நாம் அரைத்து வைத்துள்ள சட்னியை இதில் சேர்த்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான் சட்னி ரெடி..