தாமரை விதை சூப்
தேவையானவை:
தாமரை விதைகள் - 1 கப்,
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
சோம்பு - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
செய்முறை:
வெறும் கடாயில் தாமரை விதைகளைச் சேர்த்து, சிறு தீயில் வறுக்கவும். சற்று நிறம் மாறியதும் இறக்கி, ஆறவிடவும். ஆறியதும் பாதி அளவு விதைகளை மிக்ஸியிலிட்டுப் பொடி செய்யவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் சோம்பு சேர்க்கவும். அதனுடன் தாமரை விதைப் பொடியையும் சேர்க்கவும். மூன்று கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மீதமுள்ள தாமரை விதைகள், கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.