தாமரைப்பூ பொரியல்
தேவையானவை:
தாமரைப்பூ - 10,
தேங்காய் துருவல் - ½ கப்,
ஊறிய பருப்பு - 50 கிராம்,
வெங்காயம் - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு,
உப்பு - சுவைக்கு,
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்,
எண்ணெய் - 4 ஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பருப்பு கிள்ளிப்போட்டு தாளித்து அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் அரிந்த தாமரைப்பூ, ஊறிய பயத்தம் பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கி, தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கினால் தாமரைப்பூ பொரியல் ரெடி. இது மன அழுத்தத்தை குறைக்கவல்லது.